அரசியல்

திமுக செய்த தவறுகளை மக்களிடம் சொல்ல வேண்டியது கட்டாயம் – அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி இருக்கும் என்றும், ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், தாங்கள் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினைகளைச் சரிசெய்ய தாங்கள் போராடி வருவதாகவும், தமிழகத்தின் நிதிநிலை மற்றும் பல்வேறு துறைகளின் நிலை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, மூன்று தலைமுறைகளாக, 70 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம் என்று கூறுவது மட்டும் போதாது என்றும், மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை விளக்க வேண்டும். இதனால் மக்களை ஏமாற்றுவதாகக் கூறப்படும் விஷயங்களை அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்களது கடமை என்றும் அவர் கூறினார். பின்னர், கச்சத்தீவு விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் விளைவாகவே தற்போது தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைக்கு யார் பொறுப்பு என்பதை மக்களிடம் கேட்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் ரத்தீஷ் என்பவர் குறித்து அமைச்சர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாக இருப்பது ஏன் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button