
திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர பெருமாள். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து அந்த பெண் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேந்திர பெருமாளை அழைத்து எச்சரித்து அனுப்பிய நிலையில், அவர் மீண்டும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தனது விருப்பத்துக்கு சம்மதிக்காவிட்டால் மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.