
கொடைக்கானலுக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வந்த உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் , நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில் ஆய்வு…
கொடைக்கானலில் இரண்டு அரிசி சேமிப்பு கிடங்கு மட்டுமே உள்ள நிலையில் அதிகாரிகள் இதைக் கூட மேற்பார்வை இட முடியாதா என்று கடிந்து பேசிய அமைச்சர்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுப் பயணமாக வந்த நிலையில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட ரமணன் திடீரென்று கொடைக்கானல் அப்சர் வேட்டரி பகுதியில் அமைந்துள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எண்ணெய் , பருப்பு ,மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார் .
மேலும் பணியாளர்கள் நேரம் மற்றும் ஊதியங்களை கேட்டறிந்தார் பணியாற்றும் பணியாளர்களின் அறையில் காலி சாக்கு பைகள் குப்பையாக கிடந்ததை கண்டு அதிகாரிகளையும், பணியாளர்களையும் கடுமையாக கண்டித்தார்,
அதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் அரிசி சேமிப்பு கிடங்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள காலி சாக்குப் பைகளின் எண்ணிக்கை மற்றும் அதனை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்,
மேலும் கொடைக்கானலில் உள்ள இரண்டு அரிசி சேமிப்பு கிடங்குகள் மட்டுமே உள்ள நிலையில் இதைக் கூட மாதத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது மேற்பார்வை இட முடியாதா இதற்கு நான் தான் வர வேண்டுமா என்று வட்டாளர் மேலாளரை கடிந்து பேசினார் . அரிசி சேமிப்பு கிடங்கில் ரேஷன் பொருட்களை எலிகள் சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் .
