
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது வீட்டின் பூட்டை கடந்த மாதம் 28-ஆம் தேதி உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.மேலும், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சின்னாளப்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அசனாத்புரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் அவரது மனைவி ரம்ஜான் மற்றும் மதுரை செல்லூரைச் சேர்ந்த மணிவாசன் ஆகிய 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.