
கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், கஜானன் தாமோன், சாரதா தாமோன், பாரதி தாமோன் மற்றும் ரோஷன் தாமோன் ஆகியோர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ப்ரியா, கங்கா ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின் கசிவு காரணமாக பிரிட்ஜில் அதிகப்படியான மின் அழுத்தம் ஏற்பட்டதே வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது போன்ற மின்சார விபத்துகளைத் தவிர்க்க, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களை முறையாகப் பராமரிப்பதுடன், பழுதடைந்த மின் இணைப்புகளை உடனடியாக சரிசெய்வது அவசியம் என்று கூறியுள்ளனர்.
