க்ரைம்
Trending

மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூட வளாகத்தில் கைகலப்பு                            

திண்டுக்கல் நகரில் சமீப காலமாக FL2 பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதில் இருந்து FL2 கடைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது .           

               அதே நேரத்தில் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது முறையான உறுப்பினர்கள் அல்லாத நபர்கள் மது அருந்த அனுமதிப்பதால் மது போதையில் மற்ற மது அருந்தும் நபர்களுடன் சண்டை போடுவது போன்ற தேவையற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.     

இந்த சூழ்நிலையில் இன்று இரவு சுமார் பத்து மணி அளவில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகில் புதிதாக ஆரமிக்கப்பட்டுள்ள சன்லைட் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மது அருந்தும் இடம் அமைந்துள்ள வளாக வாகன நிறுத்துமிடத்தில் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது

 FL2 பார்களை ஆய்வு செய்வது மற்றும் கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டிய கலால்துறை, டாஸ்மாக் நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை மாவட்ட நிர்வாகம் உட்பட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடாததால் தான் இது போன்ற மோதல்கள் மற்றும் மனமகிழ் மன்றத்தினரின் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button