க்ரைம்

கிருஷ்ணகிரி : போலி ஆவணத்தில் நிலம் பதிவு செய்ததாக புகார் – சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், போலி ஆவணங்கள் மூலம் நிலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேவநத்தம் பகுதியைச் சேர்ந்த பங்கி நாயுடுவுக்கு சொந்தமான 2.36 ஏக்கர் நிலம், ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட நிலப் பதிவை ரத்து செய்து, முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button