

திண்டுக்கல் விஸ்வகர்மா மண்டபத்தில் விஸ்வகர்மா அறக்கட்டளையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், விஸ்வகர்மா மகாஜன சபா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார்.
மேலும்,
மாணவ மாணவியருக்கும், பொது மக்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கினார்.
உடன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம், கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் சுபாஷினி, விஸ்வகர்மா அறக்கட்டளை இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
