க்ரைம்
Trending

ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் நேற்று இரவு முதலே கொண்டாட துவங்கிய ரசிகர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தைக் காண இரவிலேயே வெடி வெடித்து கொண்டாட்டத்தோடு தொடங்கிய ரசிகர்கள்.

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

பட வெளியிட்டு முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழகத்தினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் படம் வெளியாக உள்ள ராஜேந்திரா திரையரங்கு முன்பு இரவிலேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டினர் பட்டாசு வெடித்து பிளக்ஸ் பேனர்கள் அமைத்து படத்தை வரவேற்கிறார்கள்.

ஜனவரி ஒன்பதாம் தேதி படம் வந்திருந்தால் தளபதி விஜய் என சொல்லியிருப்போம் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என படத்தை கொண்டாட காத்திருக்கிறோம் இன்று மட்டும் கொண்டாட்டம் அல்ல நாளை இதை விட பெரிய கொண்டாட்டம் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் ரசிகர்கள்.

இன்று தான் படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று இரவு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்து டிக்கெட் புக் செய்வதை பார்க்க முடிந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button