காவிரி நீர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் கர்நாடகாவின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில், கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் மோகன் கட்டார்கி உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆலோசனை மேற்கொள்வார் என்றும், கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


