க்ரைம்
Trending

எங்க பேர்ல கேஸ் போட இந்த உலகத்திலேயே எந்த போலீசும் இல்லை. சும்மா தில்லா களவாடின எலி

நகை கடையில் தங்கம் “திருடிய” எலி – புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்

கர்நாடகா – தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் காலை ஊழியர்கள் பொருட்களை சரிபார்த்தபோது 10 தங்க மோதிரங்கள் மற்றும் 2 தங்க செயின்கள் காணவில்லை என தெரியவந்தது.

முதலில் திருட்டு நடந்ததா என CCTV-யை பார்த்தார்கள். அதில் சந்தேகம் எதுவும் இல்லை.

பிறகு இன்னொரு ட்ரே-யில் நகை டேக் மட்டும் காணவில்லை என்பதை பார்த்து சந்தேகம் வந்தது. அதனால் இரவு முழுவதும் உள்ள CCTV-யை மீண்டும் பார்தார்கள்.

அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு எலி தங்க மோதிரத்தை இழுத்துக்கொண்டு போவது பதிவாகி இருந்தது.

அந்த எலி ஒவ்வொரு நகையாக கடைக்குள் இருந்த பெரிய துளைக்குள் தூக்கி சென்றிருப்பது தெரிந்தது.

உடனே ஊழியர்கள் அந்த துளையை தோண்டி பார்ததில், தொலைந்த 10 மோதிரங்கள் மற்றும் 2 செயின்கள் அனைத்தும் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன.

தங்கம் விக்கிற விலையில் எலிக்கு கூட தங்கத்து மேல ஆசை வந்துடுச்சு போல

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button