க்ரைம்

மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் வங்கி வாசலில் மனைவியை மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பெரம்பூர் ஆதிசேஷன் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ்-ரெபேக்கா. இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்தாண்டு குழந்தையை சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் அழைத்துச் சென்று கொன்று விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், குழந்தையை கொன்ற வழக்கில் சிறைக்கு சென்ற சதீஷ் கடந்த வாரம் ஜாமினில் வெளியில் வந்தார். இதனை தொடர்ந்து, கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து கொண்டிருந்த மனைவி ரெபேக்கா பார்க்க வந்த சதீஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரெபேக்காவின் தலை மற்றும் கை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரெபேக்காவை அருகில் இருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓட முயன்ற சதீஷை அங்கு இருந்தவர்கள் சுற்றி வளைத்து கீழ்ப்பக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button