அரசியல்

பாஜக உடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டும் திமுக – அமைச்சர் அருண்ராஜ்

கடந்த ஆட்சிகளில் பல்வேறு நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மருத்துவமனைகளில் மருத்துவர்களின் திறன் மட்டும் அல்ல செவிலியர்களின் திறனும் தேவைப்படுகிறது என்ற குறிப்பிட்ட அவர், தொகுப்பூதியத்தில் பணி செய்யும் செவிலியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, காவிரி விவகாரம், தொகுதி மருவையறை ஆகிய இரண்டுமே இரண்டு கண்கள் போன்றது என குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறிய காரணத்தால், பாஜக உடன் கூட்டணி வைக்க திமுக ஆர்வம் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், சென்னையின் வளர்ச்சிக்காக கடந்த 60 ஆண்டுகளில் எந்தவித திட்டமிடலும் இல்லை என கடுமையாக சாடிய அவர், கடந்த ஆட்சிகளில் பல்வேறு நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், நாம் இருக்கும் இடத்தில் தண்ணீர் வரவில்லை, நாம் தான் தண்ணீர் இருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button