
சென்னை புது வண்ணாரப்பேட்டை, சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழா புது வண்ணாரப்பேட்டை தங்க மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமையேற்று காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 1024 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். மேலும், பெருந்தலைவர் பற்றி பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இளைஞர் அணி மாநில செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான விஸ்வநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாடலாசிரியர், கவிஞர் மற்றும் எழுத்தாளருமான மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பெருந்தலைவர் பற்றி சிறப்புரை ஆற்றினார். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் லார்டு பாஸ்கர் நன்றி கூறினார்.



