
சங்கரன்கோவில் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசியை டாடா சுமோவில் கடத்திய நபர் கைது செய்யபட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், சங்கரன்கோவில் இலவன்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த டாடா சுமோ வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1500 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சங்கரன்கோவிலை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


