
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை, சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர் அந்த மனுவில்
சிறுநாயக்கன்பட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்து தற்போது எல்லைக்கல்லுகள் நடப்பட்டுள்ளது எனவே பத்திர பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்க வேண்டும் என்றும்.
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டு நிலத்தை மீட்டு பஞ்சமி நிலமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
