செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழு கடனை முறையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுய உதவி குழு பெண்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் 2021 ஆம் ஆண்டு திமுக அரசு கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழு மூலம் வாங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் வாங்கிய பெண்கள், கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என நினைத்து கடனை கட்டாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடன் வாங்கிய மகளிர்களுக்கு வங்கி நிர்வாகம் குழுவின் கடனுக்கு வட்டியோடு ஒரு பெருந்தொகை கூறி கந்துவட்டி போல் வசூலிப்பதற்கு மிரட்டியதோடு மட்டுமில்லாமல், வீட்டில் உள்ள பொருட்களை காவல்துறை மூலம் ஜப்தி செய்து விடுவதாகவும் உடனடியாக கடனை கட்டுமாறு வங்கியின் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் கூட்டுறவு வங்கியின் செயலாளர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழு கடன் முழுவதையும் வட்டியோடு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர். மேலும் இது குறித்து கடந்த 2023ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button