க்ரைம்

ஹைதராபாத்; மதுபோதையில் தவறான பாதையில் வந்த கார் மோதி ராணுவ வீரர் பலி

ஹைதராபாத் ராஜேந்திரநகர் எல்லைக்குட்பட்ட ஹைதர்ஷாகோட் பகுதியில், மதுபோதையில் தவறான பாதையில் வந்த கார் ஒன்று, ராணுவ வீரர் உட்பட பலர் மீது மோதி கொடூர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோர விபத்தில், ரவீந்தர் என்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விபத்துக்குக் காரணமான காரின் உரிமையாளர் ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த கிராந்தி கௌட் என அடையாளம் தெரிந்தது. தொடர்ந்து, போனாலு பண்டிகையை முன்னிட்டு, காரின் உரிமையாளர் தனது உறவினர்களுடன் சேர்ந்து அதிக அளவில் மது அருந்தியதாகவும், அவர் அதிகாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக அதிவேகமாகக் காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விபத்தின் போது காரில் இருந்த அனைவரையும் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button