
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியரின் செயல்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈ.செல்வராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களில் முட்டை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும் முறை குறித்தும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் நோயாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோயாளிகளுக்கு முறையாக உணவு மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



