
முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது உருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தவெக அரசு தனது 100-வது நாளை விளம்பரப்படுத்தி கொண்டாடுவதாகவும், “மாற்றம்” என்று கூறினாலும் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், போதைப்பொருள் குறித்து புகார் அளிக்க வந்த மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.


