
சென்னை ஆவடியில் இருந்து ராயபுரம் நோக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் மோகனசுந்தரம் அயனாவரம் நூர் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டி ஹெல்மெட்டால் மோகனசுந்தரத்தை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து சென்றுள்ளார். பின்னர் நடத்துனர் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு மருத்துவமனையின் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
