
தென்காசி மாவட்டம், ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அய்யாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினரும், உறவினர்களும் இணைந்து பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், காட்டுப்பகுதியில் மூதாட்டி இறந்து கிடப்பது தெரிய வந்தது. இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் மரணம் தொடர்பான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
