நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் FQL செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் FQL முதலீட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களே மரத்திலிருந்து ராஜாவின் உடலை கீழே இறக்கி கட்டிலில் வைத்து அவர்களை தூக்கி சென்று நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்


