
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான பால்கோவாவின் விலை சர்க்கரை விலை உயர்வால் கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பால்கோவா அனுப்பப்படுகிற நிலையில் தொடர்ந்து, சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ள நிலையில், பால்கோவா தயாரிப்புக்கான செலவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பால்கோவா தற்போது ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், பால் விலையும் உயர்ந்தால் பால்கோவா விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
