
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் அடையாளங்கள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
