
கிருஷ்ணகிரி காலி மதுபாட்டில் விற்க முயன்ற தகராறில், தனியார் வேளாண் நிறுவன ஊழியர் அருண்குமார் கல்லால் அடித்து கொல்லப்பட்டதால், மதுபானகடைக்கு பூட்டு போட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடுவை சேர்ந்த அருண்குமார், நண்பர்களுடன் பூசாரிப்பட்டி மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர், இரவு 9 மணிக்கு கடை மூடப்பட்ட நிலையில், அருகிலுள்ள பெட்டிக்கடையில் காலி மதுபாட்டில்களை கொடுத்து பணம் பெற முயன்றுள்ளார்.
அப்போது கார்த்திக் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கார்த்திக் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் அருண்குமாரை கல்லால் தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
