அரசியல்

முதலமைச்சரின் கண்காணிப்பில் வீரமணி வழக்கு யாரும் தப்ப முடியாது – அமைச்சர் ராஜ்மோகன் சவால்

வீரமணி பாலியல் வழக்கு முதலமைச்சரின் தீவிர தனி கண்காணிப்பில் உள்ளது. இந்த வழக்கில் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய திமுக ஆட்சியில் ஒரு வருடமாக இந்த வழக்கில் விசாரணை நடைபெறாதது ஏன் என்றும், விசாரணையை தடுத்தது யார் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து, வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button