
அரியலுார் மாவட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது சித்தப்பா கண்ணையனுக்கும் பாதை பிரச்னை இருந்தது. இதையடுத்து, நேற்று இரவு, கண்ணையன் மகள் காவியா கணவர் அறிவழகன் என்பவருடன் பிரச்னைக்குரிய அந்த பாதையில் நடந்து சென்றார்.
இதையறிந்த ராஜா மதுபோதையில் அவர்களை தரக்குறைவாக பேசியதில், தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த கண்ணையன் அவரது மூத்த மகன் சுப்ரமணியன் ராஜாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய கண்ணையன், சுப்ரமணியன், கார்த்திகா, விஷ்வா, அறிவழகன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து, ராஜாவின் உறவினர்கள் அரியலுார் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
