
திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் திண்டுக்கல் மாவட்ட யோகா சாம்பியன்ஷிப் சார்பாக நடைபெற்ற யோகாசனப் போட்டியில் திண்டுக்கல் , ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகத்தில் நடைபெறும் தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகள் 3 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு தேர்வு போட்டியானது நடைபெற்றது இந்த போட்டிகள் புஜங்காசனம், சங்கராசனம், ரகபாதாசனம், வீரபத்ராசனம், தனுராசனம் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் நடைபெற்றது இந்தப் போட்டிகளில் தேர்வு வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர் மேலும் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திண்டுக்கல் வாசவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறக்கூடிய மாநில போட்டிகளுக்கு 32 வீரர் வீராங்கனைகளுக்கான தேர்வு நடைபெற்றது.

