திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான சுமார் 8 சவரன் நகை மற்றும் பணம் எடுத்து சென்று சிறுமி ஜெய்கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஜெய்கிருஷ்ணா கூறியதால் நகைகள் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் சிறுமியை நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read Next
15 hours ago
சட்டங்களை மதிக்காத கால்நடை வியாபாரிகள் – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் , மாவட்ட காவல்துறை
16 hours ago
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தேர்வுக்கான யோகா போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
22 hours ago
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா
2 days ago
கொடைக்கானல் ஓட்டுநர் தற்கொலை வழக்கில் ஓராண்டாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை: காவல்துறை மீது வழக்கறிஞர் குற்றச்சாட்டு
2 days ago
2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கல்குவாரியில் தள்ளிக் கொலை – ஒன்றரை ஆண்டிற்கு பின் கணவர் கைது
2 days ago
ஓய்வு தலைமையாசிரியர் வீட்டில் 102 சவரன் தங்க நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீசார் வலை
3 days ago
பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இணைப்புச்சாலை பணியினை நிறைவேற்றி கொடுத்த தவெக நிர்வாகி
3 days ago
வாகன நிறுத்தமாக மாறி போன ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
3 days ago
கழுத்து நிறைய நகை அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட பெண் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலை
3 days ago
சேலம் : நிலம் அளப்பதற்கு விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
Related Articles
பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு – வடமாநில இளைஞர் கைது
July 27, 2026
10 ஆண்டுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக நடைபெற்ற செவிலியர்களுக்கான பொதுநல சங்கத் தேர்தல்
July 28, 2026
நிச்சயதார்த்தம் மட்டும் தான்…கல்யாணம்லா இல்லங்க…
December 5, 2021
Check Also
Close