
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா சாணிப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பத்தாயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி உள்ளது

அதற்கு வரும் குடிநீரை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் அப்பகுதிகளில் மரங்களை நட்டுள்ள செடிகளுக்கு பைப் லைன் மூலம் பாய்ச்சி வருவதால் போதிய குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூட்டணி கட்சியான காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தார்
சட்டமன்ற உறுப்பினராக காந்தி ராஜன் இருந்து வருகின்ற நிலையில் தனக்கு சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக வீராசாமிநாதன் இவ்வாறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார் . சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்