
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலன் இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். வண்ணாரப்பேட்டை சிபி சாலை சுரங்கப்பாதை அருகே பாலன் சாலையை கடக்க முயன்ற இருக்கிறார்.அப்போது
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலன் மீது மோதி இருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த பாலன் சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் காணப்பட்ட பாலனை
அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தலையின் பின் பகுதியில் பலத்த காயமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலன் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனம் என தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரான பாலனுக்கு 60 வயது என்றும் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பதும் முதற்கட்ட தகவலில் தெரிய வந்திருக்கிறது.