தொழில்நுட்பம்

மின்சார கார்களை ஏற்றிச் சென்ற முதல் சரக்கு ரயில்

தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு ரயிலில் 100 வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.22.07 லட்சம் சரக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகே வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனத்தின் நவீன மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. தற்போது அந்த ஆலையில் மாதத்திற்கு சுமார் 1,800 முதல் 2,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், ரயில் போக்குவரத்தையும் தனது தளவாடத் திட்டத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை இணைத்துள்ளது. அதன் முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மாதத்திற்கு சுமார் 10 NMG சரக்கு ரயில்களை இயக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்தின் ஆட்டோ மொபைல் சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வின்ஃபாஸ்ட் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதிக்கு 100 மின்சார கார்களை ரயில் மூலம் அனுப்பியது. 3-ஆம் தேதி, 25 பெட்டிகளைக் கொண்ட NMG ரயில் மூலம் இந்த சரக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.22.07 லட்சம் சரக்கு வருவாய் கிடைத்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button