
தண்டையார்பேட்டை மண்டலக் குழுக் கூட்டத்தில், குப்பை அகற்றுதல், சாலை, கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், கடந்த சில மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.22 ஆயிரம் வரை மின் கட்டணம் வந்துள்ளதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மக்கள் பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். கவுன்சிலர்கள் தெரிவித்த அனைத்து குறைகளையும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



