
தாம்பரம் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பிரைவேட் பப்ளிக் பாட்னர் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெறுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வழங்கப்படும் குடிநீரே முறையாகவும் சுத்தமாகவும் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், குடிநீருக்காக சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி என இரு வகையில் வரி செலுத்தப்படும் நிலையில், குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர். தொடந்து, குடியிருப்போர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திய அப்பகுதி மக்கள், தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை சந்திப்பதை தவிர்ப்பதாகவும், வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதாக கூறிய த.வெ.க அரசின் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.
