செய்திகள்

5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் – அமைச்சர் ரமேஷ்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றி கழக ஆட்சியில் 100 நாட்களில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பெருமை தெரிவித்த அவர், லஞ்சம் மற்றும் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதே இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தொன்மையான கோயில்களை உலக அளவில் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று உறுதியளித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button