
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம் சார்ந்த மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், விஜய் முதலில் தனது அரசியல் திறனை நிரூபிக்க வேண்டும் என்றும், சிறந்த அரசியல் வில்லன் நடிகர் விஜய் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், அரசு பணிகளில் வெளிமாநிலத்தினரை நியமிப்பதாகவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தமிழகம் முன்பு வளர்ச்சியில் முன்னிலையில் இருந்ததாகவும், தற்போது மாநிலம் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் திமுக மீது குற்றச்சாட்டு முன்வைத்தார். அதிமுக–அமமுகவை பிரித்து பார்க்க வேண்டியதில்லை எனக் கூறிய தினகரன், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே கட்சி பலப்படும் என்றார். கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கு மீண்டும் பதவி வழங்குவது சரியாக இருக்காது என எடப்பாடி பழனிசாமி தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இது மக்களு கொடுமையான காலம்கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் என திமுக மீது என்ன குற்றச்சாட்டு வைத்தோமே அது தற்போது அதிக அளவு பரவி இருக்கிறதுதற்போது சூழலில் நான் சட்டமன்றத்திற்கு செல்லாமல் இருப்பது நன்மையாக பார்கிறேன். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணிகூட்டணியுடன் இணைந்து சந்திப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
