
திருச்சி இனாம்குளத்தூர் சந்தப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் அயன் செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் மின் கட்டணத்துடன் டெபாசிட் தொகையும் உயர்ந்தது. இது குறித்து வண்ணாங்கோவில் மின்வாரிய அலுவலகத்தின் ஆர்.எஸ். பிரிவில் பணிபுரியும் பழனிச்சாமியிடம் அவர் கேட்டுள்ளார்.அப்போது, ரூ.21 ஆயிரம் டெபாசிட் தொகையுடன் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பழனிச்சாமி தெரிவித்ததார். டெபாசிட் தொகையை செலுத்தாமல் மின் கட்டணம் மட்டும் செலுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் ரூ.6,800 பெற்றுக்கொள்ள சம்மதித்tதுள்ளார். இதையடுத்து, பழனிச்சாமி லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டபோது அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

