செய்திகள்

சிவகாசி : இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு – கிறிஸ்தவர்கள் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாதங்கோவில்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிவகாசி–ஆலங்குளம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்,சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button