
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணியில் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராகும் சூழல் உருவாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும், அதற்கு தவெக எதிர்ப்பு தெரிவித்தால் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததார்.