க்ரைம்
Trending

ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த ஆய்வாளர் விருது – 2026 வழங்கும் விழா

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வியியல் துறை இணைந்து நடத்தும் ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த ஆய்வாளர் விருது – 2026 வழங்கும் விழா நடைபெற்றது

திண்டுக்கல், செப்டம்பர். 08.2026

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வியியல் துறை இணைந்து நடத்தும் முப்பெரும் விழா “ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த ஆய்வாளர் விருது – 2026 வழங்கும் ” விழா இன்று (08.09.2026) காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இவ்விழாவிற்கு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். பஞ்சநதம் தலைமை தாங்கி தொடக்க உரை ஆற்றினார். கல்வியியல் துறைத் தலைவர் முனைவர் பி.எஸ். ஸ்ரீதேவி வரவேற்புரையாற்றினார்.


கோவை கே.ஜி. மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான பத்மஸ்ரீ முனைவர் ஜி. பக்தவத்சலம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மனித வாழ்க்கையில் ஆரோக்கியமே மிக முக்கியமானதாகும் என்று வலியுறுத்தினார் ஒரு தனிமனிதனையும் சமுதாயத்தையும் உயர்த்துவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்களின் பங்ளிப்பையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், சிறந்த மன ஆரோக்கியத்திற்கு சூழ்நிலைகளையும் மனிதர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் கே. மாரிமுத்து, வேளாண்மை மற்றும் விலங்கியல் அறிவியல் புலத்தின் மூத்த பேராசிரியரும் முன்னாள் பதிவாளருமான முனைவர் எம். சுந்தரமாரி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் மூத்த பேராசிரியர் எஸ். மீனாட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


விழாவில் சிறந்த பேராசிரியர்களும், தலைசிறந்த ஆராய்ச்சி அறிஞர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் மிக முக்கிய அம்சமாக, கல்வியியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் என். தேவகி எழுதிய இரண்டு புதிய நூல்கள் இவ்விழாவில் வெளியீடு செய்யப்பட்டன. தொடர்ந்து அவர் விழாவின் நிறைவாக நன்றியுரை கூறினார். இவ்விழாவினை கல்வியியல் துறையைச் சேர்ந்த முனைவர் ஆர். ஜெயந்தி, முனைவர் ஆர். கிங்ஸ்டன் மற்றும் முனைவர் எஸ். ஜெர்ஸ்லின் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button