க்ரைம்

ஒரு கல்குவாரியால் அழிவின் விளிம்பில் பத்து விவசாய கிராமங்கள் 

திண்டுக்கல் அருகே விவசாய விளை நிலங்களை பாதிக்கும் வகையில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர்.

பட்டா நிலத்தில் தொடங்கி பாரஸ்ட் நிலத்தையும் விட்டுவைக்காத கல்குவாரி நிறுவனம் – பிரித்யேக கழுக்குப்பார்வை காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கம்பளிநாயக்கன்பட்டி ,காளாஞ்சி பட்டி , அத்திக்கோம்பை , மூலச்சத்திரம் , சட்டையப்பனூர், பொம்ம நல்லூர், ரங்கநாதபுரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை  சேர்ந்த  சுமார் பத்து கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட  விவசாய விளை நிலங்களில்  விவசாயம் செய்து வருகின்றனர். பத்து கிராமங்களையும் சேர்த்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் மொத்த வருமானம் மற்றும் வாழ்வாதாரம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது .

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த இருவது ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு கல் குவாரி அமைத்து நடத்த  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைவது மட்டுமின்றி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில்  காற்று மாசு காற்று ஏற்படுவது உடன்  வனவிலங்குகள் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறி 100 -க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆரம்பத்தில் சிறிய இயந்திரங்களை கொண்டு பாறைகளை உடைத்து அனுப்பி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களையும் ஆக்கிரமித்து கனிமவள சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் அதி நவீன இயந்திரங்களை கொண்டு தரைப்பகுதிக்கு மேல் இருந்த பாறைகளை உடைத்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது தரைமட்டத்திற்கு கீழ் சுமார் இருநூறு அடிக்கும் கீழ் தோண்டி எடுத்து வருவதாகவும் இதற்காக அதிக சக்தி உடைய வெடி மருந்துகளை பயன்படுத்துவதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பத்து கிராம விவசாய மற்றும் வீட்டு உபயோக கிணறுகள் , ஆழ்துளை கிணறுகளில் மண்சரிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாமல் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .
                மேலும் இந்த இடத்தில் இருந்து தற்போது பல அளவுகளில் சல்லி கற்களும் எம்சாண்ட் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் கொண்டுசெல்கின்றனர் . இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் குடியிருப்புகளில் தூசிகள் பரவி படிவதால் விவசாயம் முற்றிலும் முடங்கி வருவதுடன் அப்பகுதி முழுவதும் வாழ தகுதியற்றதாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரங்கநாதர் மலையின் உச்சியில் மிக பழமையான பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது இந்த கல்குவாரி நிருவாகத்தின் கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து சோதனைச்சாவடி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி பொதுமக்களை கோவிலுக்கு செல்லவிடாமல் தடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்


                       ஆழ்துளை மற்றும் கிணறுகளில் நீர் இல்லாததாலும் அனைத்து இடங்களுக்கும் தூசி பரவி வாழ தகுதியற்றதாக மாறி வருவதுடன் சுவாச கோளாறு போன்ற பல்வேறு நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர் . இது தொடர்பாக பொதுமக்கள் தனி தனியாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளித்தும் வருடங்கள் பல கடந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
                 எனவே பத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்து மனுவாக குடுத்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button