க்ரைம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கிணற்றில் தள்ளி கொலை – ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே மேல்அயனம்பாக்கம், சந்திரமவுலீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள தரைக்கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், உயிரிழந்தவர் திருவேற்காடு சின்ன கோலடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாஸ்கர் என்பதும், அவருக்கு சந்தியா என்ற மனைவியும், 2 மகன்களும் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாஸ்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 20-ம் தேதி பாஸ்கரும் அவரது நண்பரான சரவணன் என்பவரும் கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்திய போது இருவருக்கும் இடையே ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் முற்றியதில் பாஸ்கரை சரவணன் கிணற்றில் தள்ளியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button