
திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து தான் நடந்தது ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, வீரமணி தொடர்பான புகாரில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும், சிறப்பு விசாரணைக் குழு ஏன் அமைக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், வீரமணியிடம் பணம் பேரம் பேசப்பட்டதாக வரும் புகார்கள் குறித்து முதல்வரின் உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்புடைய அனைவரிடமும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
