க்ரைம்
Trending

சமரச விழிப்புணர்வு பேரணி


திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையம், மாவட்ட நீதிமன்றம் சார்பில் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின்படி, தேசத்தின் சமரசம்-3.0, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஒருகிணைந்த நீதிமன்றம் முன்பு தொடங்கிய பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி திரு.பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் GTN சட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இருதரப்பும் வெற்றி பெறுவதற்கான அறிவார்ந்த வழி சமரசமாகப் போவதே. மன அமைதிக்கு வழி பேசி தீர்ப்பதே புத்திசாலித்தனம். நிம்மதியான வாழ்வை நேசிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் மாவட்ட சமரச தீர்வு மைய தலைவர் திரு.சொர்ணம் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் திரு.நீதிபதி இன்ப கார்த்திக் மற்றும் ஏனைய நீதிபதிகள், மத்தியஸ்தர்கள்/ வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button