க்ரைம்
Trending

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார்கள் சங்கங்கள் சார்பாக புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அனைத்து பிள்ளைமார் சங்கங்கள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது

அந்த மனுவில் -: சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும் பொதுமக்களின் அமைதியை குறைக்கும் விதமாகவும் உள்ளது எனவே
ஒளிபரப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து காட்சிகளை சமூக வலைதளத்தில் பரவாமல் தடுக்க வேண்டும் , தேசியத் தலைவர் வ உ சி தியாகத்தையும், மாண்பையும் பாதுகாத்து உதவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button