கர்நாடக மாநிலம் ஹோலேமுரதட்டி வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலைக் கண்டு சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல் வனத்துறை ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிராக வனத்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் வனத்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த செய்தி பரவியதும், அப்பகுதி மக்கள் ஹனூரில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ராமாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Next
22 hours ago
சிவகங்கை : ஓட ஓட விரட்டி இரண்டு வாலிபர்கள் கொடூர கொலை
22 hours ago
காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
1 day ago
பிள்ளையார் சிலை ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு.
2 days ago
கடையநல்லூர் : பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
2 days ago
மதத்தை மாற்றி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்த நபர் கைது
2 days ago
திருச்சி : ரயிலில் மொபைல் போன் திருடிய நபர் கைது
2 days ago
டில்லியில் ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்க கேப்சூல்கள் பறிமுதல் – வங்கதேச பயணி கைது
2 days ago
கள்ளச்சந்தை மது விற்பனை புகார் – காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல்
3 days ago
குப்பை லாரியில் ஆற்று மணல் – போலீசார் பறிமுதல்
3 days ago
ஆம்னி பேருந்தில் பேராசிரியையிடம் 40 சவரன் நகை திருட்டு – ஒருவர் கைது
Related Articles
Check Also
Close
-
வனப்பகுதியில் பரவிய காட்டு தீ – நீலகிரி மாவட்டம்April 9, 2024
