நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் தீர்க்கமான நிலைப்பாடு என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை திறந்து வைத்து மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் 3 மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, நீட் தேர்வு வேண்டாம் என்பதே நீட் தேர்வு குறித்த தமிழ்நாடு அரசின் தீர்க்கமான நிலைப்பாடு என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார்.