
கிருஷ்ணகிரி அருகே இரண்டு ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறி கிரமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய இராணுவ வீரரான செல்லப்பா மற்றும் அவரது மகனும் இந்திய ராணுவ வீரருமான மகேஷ் குமார் ஆகியோரை கொலை செய்யப்பட்ட வழக்கில் மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியா அவரது ஆண் நண்பரான பூவரசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர். உயிரிழந்த மகேஷ்குமாரின் தாயார் காளியம்மாள், பானுபிரியாவின் உறவினர்கள் தங்களை அடியாள்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இந்த இரட்டை கொலை வழக்கில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ளனர். ஆகவே இந்த இரட்டை கொலை வழக்கை சி.பி.ஐ, -க்கு மாற்றம் செய்திட வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை சந்தித்து கண்ணீருடன் புகார் மனுவினைக் கொடுத்தனர்.
