
திருச்சுழி அருகே சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.11,200 பணம் கைப்பற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில், ஆடிப்பெருக்கு நாளையொட்டி பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெற்றன. இந்த நிலையில், மாலை நேரத்தில் சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், கணக்கில் வராத ரூ .11,200 பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சார்-பதிவாளர் பரணிக்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.